சென்னை: தமிழகத்தில் ஒரு புறம் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், கோடை மழையும் நன்றாக பெய்து வருகிறது. இதனால் மக்களுக்கும் வெயிலிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைத்து வருகிறது.
கத்திரி வெயில் துவங்கியதிலிருந்தே தமிழகத்தில் பரவலாக மழை (Tamil Nadu Rain) பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகின்றது.
இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்தது. அந்த கணிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Weather Forecast: தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்
தமிழகத்தில் (Tamil Nadu) நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அதிகாரப்பூர்வ எச்சரிக்கை தெரிவிக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரேபிய கடல் கடற்கரை, தெற்கு தமிழக கடற்கரையில் உள்ள மீனவர்கள் (Fishermen) கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மே 14-16 தேதிக்கு இடையில் அரேபிய கடலில் சூறாவளி உருவாகலாம் என்பதால், கடலில் உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்குமாறு இந்திய கடலோர காவல்படை மீன்வளத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ALSO READ: தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR