TNPSC Group 2 Exam Result: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதில்,"கடந்த 2022ஆம் ஆண்டு டிச.15ஆம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023ஆம் ஆண்டில் மார்ச் 15ஆம் தேதி அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளயிடப்பட்டது.
தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர். தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12 ஆயிரத்து 500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிக்கை குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/xZkw9qIiP5
— TN DIPR (@TNDIPRNEWS) December 16, 2023
குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்யவேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும், குரூப்-2 முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023ஆம் தேதியில் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், குரூப்-2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், குரூப்-2 தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் குரூப்-2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் தாமதாமனதை தொடர்ந்து, பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | திராவிடத்துக்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ