தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST
  • கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் களை கட்டின
  • பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் கிறிஸ்துமஸ் குடில்
  • குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா விமரிசை
தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!! title=

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மட்டுமின்றி வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பார்கள். மேலும் வண்ண விளக்குகள் மூலம் கட்டிடங்களை ஜொலிக்க வைப்பார்கள்.

அதிலும் கிறிஸ்துமஸ் (Christmas the celebration of Jesus Chirst's brithday) குடில்களை பொறுத்தவரை ஊருக்கு ஊர் இளைஞர்கள் போட்டி போட்டு சுற்றுலா தலங்கள் போன்று பொதுமக்களை கவரும் வகையில் வித்தியாசமாக அமைத்து கொண்டாடுவர்.

அந்த வகையில் பாலப்பள்ளம் பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் பாபிலோன் தொங்கும் தோட்டம் வடிவில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்துள்ளனர்.

Read Also | கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக மாற்ற வரும் 3 படங்கள்!

இந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் நேற்று இரவு திறக்கப்பட்டது. குடிலை மத்திக்கோடு சேகரத்து சபை ஆயர் ஸ்டீபன் திறந்து வைத்தார்.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மத்திக்கோடு சேகரத்து துணை ஆயர் ஸ்டீபன்ராஜ், கிறிஸ்துபுரம் சபை ஆயர் ஹரால்டு அனித், சகாயநகர் பங்குபணியாளர் ஆரோக்கிய ஜோஸ், வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அன்ட் ஜீவன் சேரிட்டி தலைவர் சதீஷ், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஹெல்டன் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த குடில் இன்று காலை முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வின்ஸ்டார் ஸ்போட்ஸ்கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி அமைப்பினர் செய்துள்ளனர்.

Also Read | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட களமிறங்கும் படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News