H.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலனை -ஜெயக்குமார்

நீதிமன்றம், காவல்துறை பற்றி ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதற்க்கு சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 11:53 AM IST
H.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலனை -ஜெயக்குமார் title=

நீதிமன்றம், காவல்துறை பற்றி ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதற்க்கு சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!  

ராமசாமி படையாட்சியாரின் 101 ஆவது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துனைமுதலவர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில்., அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர். இந்த நிகழ்வை அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது அவர் கூறியதாவது., ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து அமைச்சர்கள் கூறுகையில்,  பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை தெரவித்தனர். சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனக் கூறினார். 

மேலும் தமிழக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்றம், காவல்துறையை விமர்சித்த விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

 

Trending News