7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர்!

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 12:11 PM IST
7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர்! title=

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலத்தில் மத்திய சிறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மத்திய சிறையில் கைதிகளின் நிலவரம் குறித்தும் அவருடைய நிலைமையை குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும் தற்போது மத்திய சிறையில் 1351 கைதிகள் உள்ளனர் எனவும், பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.  எப்போதும் 800 கைதிகள் வரை மட்டுமே  மத்திய சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறும்போது, கொரோனா தடுப்பூசி கைதிகளுக்கு பத்து நாளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   குற்றம் புரிந்த கைதிகளை பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரிந்த பிறகு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   எனவே சிறையில் உள்ள கைதிகள் தொற்று பாதிப்பு என்பது கிடையாது, மத்திய சிறையில் தொற்று ஏற்படும் என்ற அச்சமும் அபாயமும் இல்லை.  

ALSO READ | கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் பலி..! மத்திய அரசு எச்சரிக்கை

கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  மத்திய சிறையில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.  குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு தேவையான பிரெட் தயாரித்து வழங்கபட்டு, ஒவ்வொரு கைதியும் மாதம் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கும் அளவிற்கு மத்திய சிறையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.  பல ஆண்டுகளாக சிறைவாசம் உள்ள கைதிகளுக்கு விடுதலை செய்யும் நடவடிக்கை அரசு மேற்கொண்டு உள்ளது.  தற்போது நன்னடத்தை அடிப்படையில் 60 பேரின் விடுதலை குறித்து அரசாணை வெளியிடப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் 60 பேரின் விடுதலை இருக்கும். 

ragupathi

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம்.  ஏற்கனவே ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம்,  மீண்டும் இது குறித்து ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும்.  தமிழக அரசின் இரண்டாவது அரசாணையில் நீண்ட காலம் சிறையில் இருக்கக் கூடிய கைதிகளுக்கு அவர் மனநிலை, வயது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரைவில் அவர்களுக்கான விடுதலை பெறுவதற்கு அரசாணை வெளியிடப்படும் என்றும் முதல் அரசாணையை நடைமுறைப்படுத்திய பிறகு இரண்டாவது அரசாணையும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

ALSO READ | தமிழகத்தில் கூடுதலாக 50,000 கோவிட் படுக்கைகளை தயார் செய்ய உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News