மதுரை அல்லாது சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இக்கட்டடம் 1984ல் கட்டப்பட்டது.
சில ஆண்டுகளாக கட்டடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90வது வார்டின், ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதில் ஆப்பரேஷன் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த லேப்ராஸ்கோப், மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தது.
அதுமட்டுமல்லாது குழந்தைகள் நல வார்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கூரை சிமென்ட் பூச்சு விழுவது தொடர்கதையாக உள்ளது. மேலும், குழந்தைகள் வார்டுகளில் நீர்க்கசிவு ஏற்பட்டு சுவர்களில் எந்நேரமும் ஈரம் படர்ந்து காணப்படுகிறது.
மேலும் படிக்க | கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது
90வது வார்டை இடித்து விட்டு கட்ட வேண்டுமெனில் அந்த வார்டை வேறு எங்காவது மாற்ற வேண்டும். அதேபோல குழந்தைகள் நல வார்டையும் உடனடியாக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | சேலத்திற்கு ஆர்ப்பாட்டமாக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி! மெளனம் கலையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ