புதுவையில் நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை! மக்கள் குஷி!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ம் தேதியும் விடுமுறை நாளாக புதுவை அரசு அறிவித்துள்ளது.

Last Updated : Nov 3, 2018, 10:03 AM IST
புதுவையில் நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை! மக்கள் குஷி! title=

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ம் தேதியும் விடுமுறை நாளாக புதுவை அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடச் செல்வோர் கூடுதல் நாள்கள் விடுமுறை எடுத்துச் செல்லும் வகையில் வருகிற நவம்பர் 5-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதனால் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இதே போல் புதுவையிலும் வருகிற 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருப்பதால், நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அளிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுவை அரசின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் நவம்பர்  5-ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க புதுவை துணைநிலை ஆளுனர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த விடுமுறை அறிவிப்பு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் புதுவையில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News