நடத்துனரை ரோட்டில் வைத்து அடித்த போலீஸ் : தட்டிக் கேட்ட பொதுமக்கள் - வீடியோ

சென்னையில் சாலையிலேயே போலீஸ் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : May 15, 2022, 03:34 PM IST
  • ரோட்டில் வைத்து தாக்குதல்
  • நடத்துனரை தாக்கிய போலீஸ்
  • நடவடிக்கை எடுத்தது காவல்துறை
நடத்துனரை ரோட்டில் வைத்து அடித்த போலீஸ் : தட்டிக் கேட்ட பொதுமக்கள் - வீடியோ title=

சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பியதால் அரசுப் பேருந்து நடத்துனரை போலீஸ் அதிகாரி ஒருவர் ரோட்டில் வைத்தே அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்துனருக்கு ஆதரவாக மக்கள் கூடி போலீஸை தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடத்துனர் பாலச்சந்திரன் சோடா குடித்து இருக்கிறார். பின்னர் சாலையோரம் எச்சில் துப்பியிருக்கிறார். அந்தப் பக்கமாக வந்த காவலர் லூயிஸ், தன்னைப் பார்த்து எச்சில் துப்பியதாக நினைத்து நடந்துனர் பாலச்சந்திரனை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க | தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பாலச்சந்திரனுக்கு ஆதரவாக ஒன்றுகூடியுள்ளனர். காவலர் லூயிசை தடுத்தும் அவரை திட்டியும் மக்கள் கூடியதால் லூயிசுக்கு ஆதரவாக காவல்துறையும் கூடியது. பாலச்சந்திரனின் சட்டை கிழியும் அளவிற்கு லூயில் தாக்கியதை நமது செய்தியாளர் மெல்வின் படம் பிடித்துள்ளார்.

 

இந்த வீடியோ Zee Tamil News யூடியூப் தளத்தில் செய்தியாக்கப்பட்டதால் விவகாரம் பெரிதானது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையின் சிசிடிவில் இந்தக் காட்சிகள் மொத்தமாக பதிவாகியுள்ளது. ஆனால் அந்தக் காட்சிகளை பெற்றுக் கொண்ட காவல்துறை அதனை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று கூறி சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த டீக்கடை உரிமையாளர் நம்மிடம் அந்தக் காட்சிகளை ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க | சாராயக்கடையை ஏலத்தில் எடுத்த பெண்!

காவலர் லூயில் பொது இடத்தில் நடத்துனரை தாக்கிய செய்தி Zee Tamil News-ஆல் வெளியே பரவியதால் காவல்துறை தற்போது லூயிஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். அவர் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News