ஜெர்மனிய தம்பதிகளின் 20000 கி.மீ தரைவழி பயணம்

சாத்தான்குளம் வாரச் சந்தையை சுற்றி பார்த்த ஜெர்மனிய தம்பதி, அங்குள்ள வாழைக்காய் சிப்ஸ், பொரிகடலை வாங்கி மகிழ்ந்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 10, 2022, 06:32 PM IST
ஜெர்மனிய தம்பதிகளின் 20000 கி.மீ தரைவழி பயணம் title=

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்கறி,பழங்கள், மீன்,மசாலா சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக சாத்தான்குளம் சந்தைக்கு அதிக அளவில் வந்திருந்தனர்.

மேலும் படிக்க | விஷம் வைத்து கொன்று விடுங்கள்: வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்

அப்பொழுது ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் நகரத்தைச் சேர்ந்த ஜுர்கன்,பிரான்சி தம்பதியினரும் சாத்தான்குளம் வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். இந்தியாவுக்கு தரைவழியாக  சுற்றுலா வந்த அவர்கள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சாத்தான்குளம் வாரச்சந்தைக்கும் விசிட் அடித்தனர். அப்போது, சந்தை முழுவதையும் சுற்றிப் பார்த்த அவர்கள், பலாப்பழம்,கேரட், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கினர். 

தாங்கள் ஜெர்மனியில் இருந்து தரைவழியாக இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்ததாக தெரிவித்த அவர்கள், சாத்தான்குளம் சந்தைக்குப்பிறகு ராமேஸ்வரம் செல்ல இருப்பதாக தெரிவித்தனர். ஜெர்மனியில் இருந்து தங்கள் வாகனத்தை இருவரும் மாற்றி மாற்றி ஓட்டிவந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களது வாகனத்தில் ஒரு சிறிய குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளும் இருந்தன. 

மேலும் படிக்க | CM MK Stalin:மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு தப்பித்துவிட்டது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News