கஜா புயல்: 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை அறிவிப்பு....

கஜா புயல் நெருங்குவதால் காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை அறிவிப்பு.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 10:24 AM IST
கஜா புயல்: 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை அறிவிப்பு.... title=

கஜா புயல் நெருங்குவதால் காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை அறிவிப்பு.....

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.

இந்நிலையில், வங்ககடலில் உருவாகியுள்ள கஜா புயல், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும், நாகை இருந்து 400 கி.மீ.தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இன்று மாலை பாம்பன், கடலூர் இடையே நாகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக நாகை, புதுச்சேரி மற்றும் கடலூர்  துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Trending News