இலவச பயிற்சியும், உடனடி வேலையும்... வெல்டிங் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு இலவசமாக உலக தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2023, 04:05 PM IST
  • வெல்டிங் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
  • 500 பேருக்கு ஆண்டுதோறும் இலவசமாக பயிற்சி.
இலவச பயிற்சியும், உடனடி வேலையும்... வெல்டிங் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! title=

Fronious Skill Development Centre: சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெல்டிங் துறையில் முன்னணி நிறுவனமான ஃப்ரோனியஸ் (fronious)இந்தியாவில் முதன்முறையாக திறன் மேம்பாட்டு மையத்தை இன்று (ஏப். 27) தொடங்கியது. 

இதனை ஃப்ரோனியஸ் இந்தியாவின் (fronious India) இயக்குனர் வி.வி.காமத், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க | EPFO Alert! PF பணத்தை இந்த சமயத்தில் மட்டும் எடுக்க வேண்டாம்!

வேலைவாய்ப்பு

அதன் பின் பேட்டியளித்த சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம்,"இந்த மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பத்தில் உள்ள நவீன உபகரணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தொழில்துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும், வெல்டிங் நிபுணர்களுக்கு ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மட்டும் எரிவாயு நிறுவனங்கள், விமானம் மற்றும் ராக்கெட் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உலகளவில் கொட்டி கிடப்பதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலமே வேலைக்கு அமர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

Welding

மேலும் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் 5 கோடி முதலீட்டில் இந்த பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.  இதன் தலைமை அலுவலகம் புனேவில் உள்ளது, தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கி உள்ளனர்.  

கை நிறைய சம்பாதிக்கலாம்

நிறைய மாணவர்கள் இன்ஜினீயரிங்கில் ஐடி, சிவில் போன்ற படிப்புகளையே எடுக்கின்றனர். இந்த துறை குறித்த போதிய தெளிவு மாணவர்களுக்கு இல்லை. அதை போக்கவே இந்த நிறுவனம் முயற்சி செய்கிறது.  வெல்டிங் என்றால் நிறைய பேர் மிகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு வேலை என்று நினைக்கின்றனர்.  கையெல்லாம் அழுக்காகும், மோசமான வேலை என்று நினைக்கின்றனர். அதனை போக்குவதே இந்த நிறுவனத்தின் வேலை.  

வெல்டிங் வேலையிலும் நிறைய சம்பாதிக்கலாம். மாணவர்கள் இந்த பயிற்சி கூடத்தை நேரில் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆர்வம் வரும். ஒவ்வொரு வருடமும் 500 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.

ஐடி துறை போன்றதுதான் வெல்டிங்!
  
வெல்டிங் தொழிலில் என்ன என்ன பயிற்சிகள் தேவைப்படுகிறது, பிரச்சனைகள் உள்ளது என்பதையும் சொல்லி தருகிறோம்.  ஐடி கம்பெனி போல் தான் இருக்கும் இந்த பயிற்சி நேரம்.  வெல்டிங்கில் நிறைய ஆராய்ச்சி நடைபெறும், அவர்களது ஆராய்ச்சிக்கு இந்த லேப் கண்டிப்பாக உதவும். மாணவர்கள் கண்டிப்பாக இங்கு பயிற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

பாதுகாப்பு

இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஃப்ரோனியஸ் (fronious) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  வெல்டிங் துறையில் நிறைய வேலைவாய்ப்பு தேவை உள்ளது. வெல்டிங் வேலை செய்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக பலர் கருதுகின்றனர். அதில் இருந்து எப்படி பாதுகாப்பாக வேலை செய்வது என்பதையும் இங்கு பயிற்சி கொடுக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் படிக்க | எம்பிஏ பட்டதாரிகளுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி! முழு விவரம் இங்கே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News