சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 18, 2020, 04:12 PM IST
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு title=

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் COVID-19 நோயாளிகளின் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 1,367 ஆண்கள், 805 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பேரும் உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் 12 நாட்களுக்கு முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

READ | இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்!

 

இந்நிலையில், முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

“தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.5.2020 வரை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

 

READ | காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா...; திருப்பத்தூரின் இரு காவல்நிலையங்கள் மூடல்!

 

மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இந்த நடைமுறை நாளை (19.6.2020) முதல் 30.6.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்”.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Trending News