மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை இலவசம்!

பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 26, 2022, 01:32 PM IST
  • www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தை அணுகலாம்
  • 044 - 24990264, 044 - 42107550 என்ற எண்களுக்கு அழைக்கலாம்
மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை இலவசம்! title=

மேற்கு வங்கத்தை தலைமை செயலகமாகக் கொண்டு இயங்கும் இராமகிருஷ்ண மிஷன் இயக்கம் கல்வி, மத ஆய்வுகள், ஆன்மீகம் போன்ற துறைகளில் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த இயக்கம் 1897ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தாவால் நிறுவப்பட்டது.

இந்த இயக்கம் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நேபாளம், மலேசியா, ஜெர்மனி என உலகம் முழுவதும் 221 மையங்களை கொண்டு இயங்குகிறது. இந்தியாவில் மட்டும் 167 மையங்களை இந்த இயக்கம் கொண்டுள்ளது.

ராமகிருஷ்ண மிஷன் இயக்கம் சென்னையில் டி.நகர், மைலாப்பூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரியை நடத்தி வருகிறது. இதில் பல நூறு மாணவர்கள் வருடா வருடம் பயன்பெற்று வருகின்றனர்.

இங்கு பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம் மிகவும் குறைந்த அளவே வசூலிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த உண்ணத சேவையையும் தாண்டி மாபெரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | பழ.நெடுமாறனை நேரில் சந்தித்த பேரறிவாளன் - என்ன பேசினார் ?

அது என்னவென்றால், பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த சேவையின் கீழ், 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்பில் சேரவும் தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவை மற்றும் விருப்பமுள்ளவர்கள் www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தை அணுகலாம். அல்லது 044 - 24990264, 044 - 42107550 என்ற எண்களுக்கு அழைத்து கூடுதல் தகவல்களை பெறலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News