அதிமுக ஒற்றைத் தலைமைக்கு பிள்ளையார் சுழிபோட்ட அமைச்சர் ஜெயக்குமார்

காலத்தின் கட்டாயத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2022, 05:46 PM IST
  • அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்
  • ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
  • அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
அதிமுக ஒற்றைத் தலைமைக்கு பிள்ளையார் சுழிபோட்ட அமைச்சர் ஜெயக்குமார் title=

சென்னை  ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் 75 மாவட்ட செயலாளர்கள் , தலைமை கழக நிர்வாகிகள் என 150 பேர் பங்கேற்றனர். அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமையை ஏற்படுத்துவது, வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு ,செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

மேலும் படிக்க | ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான்கரை மணி நேரம் , கருத்து சுதந்திரம் அடிப்படையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆரோக்கியமான விவாதம் நடந்தது எனத் தெரிவித்தார். நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டதாகவும், ஒற்றை தலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், " பொதுக்குழு முன்பாக நடந்துள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள் , மா.செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத்  தலைமை தேவை என்று கூறியுள்ளனர்.

யார் தலைமை? என்பது குறித்து வரும்  நாட்களில் கட்சிதான் முடிவு செய்யும். கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும். முன்பிருந்த நிலை வேறு. இப்போதைய நிலைமை வேறு. எனவே காலத்தின் கட்டாயத்தால் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடத்தினோம். சூழல் மாறியுள்ளது. எனவே ஒற்றைத் தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 2 ஆயிரத்து 6 ஆயிரம் பேர் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள். அவர்கள் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள். சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடப்பற்றாக்குறையால் அழைப்பு விடுக்கவில்லை. அடையாள அட்டையுடன் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். கட்சிக்கு தொடர்பு இல்லாத சசிகலா குறித்து விவாதித்து நாங்கள் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். பாமக , பாஜகவை காட்டிலும் அதிமுகதான் முதன்மையான கட்சி" எனத் தெரிவித்தார்.  

மேலும் படிக்க | அதிமுக கழக தேர்தல்: எடப்பாடி பழனிச்சாமி மீது ஒன்றிய செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News