அண்மையில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போடவந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். பின்னர், அவரை அர்நிர்வாணப்படுத்தி தாக்கிய அதிமுகவினர், அவரை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது
சட்டத்துறை அமைச்சராக இருந்தவர், சட்டத்தை கையில் எடுக்கலாமா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | 3 வார்டில் போட்டியிட்டு 15 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் வேட்பாளர்
இந்த வழக்கில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டது மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல் என்ற தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரை சென்னை காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமாரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR