திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தமளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்க கூடாது என்றும், அதை நிரப்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் நேர்மையான தலைவராக மு.க.ஸ்டாலினின் லட்சியத்தை நோக்கிய பயணம் அது.!
அதனை செயல்படுத்த திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாற்றைத் தமிழகம் முழுவதும் எடுத்துரைக்கும் பணியில் அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கழகத்தின் சமூகநீதி போராட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட பாசறை’ என்ற தலைப்பில் இந்தப் பணிகள் கடைக்கோடி கிராமங்கள் வரை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம், எய்ப்பாக்கம் கிராமத்தில் இதுவரை எந்த சினிமா கதாநாயகர்களுக்கும் ரசிகர் மன்றம் திறந்ததில்லை. ஆனால், முதன்முறையாக இந்தக் கிராமத்தினர் திமுக இளைஞரணி மன்றம் திறந்துள்ளனர். சாலை வசதி, பேருந்து வசதி, பள்ளிக்கூட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகள் காத்துக்கிடந்த மக்கள், தங்கள் தேவைகளை அரசியல் வடிவில் பெற முடிவெடுத்துள்ளனர்.
எய்ப்பாக்கம் கிராமத்தில் துவங்கப்பட்டுள்ள திமுக இளைஞரணி மன்றத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து, மன்ற இளைஞர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மன்றத்தை தொடங்கிய நாளிலேயே தங்களுக்கான கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர் எய்ப்பாக்கம் மக்கள்.
அங்குள்ள பள்ளிக்கட்டிடங்களின் நிலைகளை எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். பள்ளி அறைகள் இல்லாமல் மாணவர்கள் கோயிலில் படிக்கும் சூழல் இருப்பதைக் கண்ட அம்பேத்குமார், பள்ளிக்கட்டிடத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், பேருந்து, சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் எய்ப்பாக்கம் மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ அம்பேத்குமார், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக இளைஞரணி மன்றம் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | சுகாதாரத்துறையிலும் ‘வடிவேல்’ - வொர்க் அவுட் ஆன விழிப்புணர்வு பிரச்சாரம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ