தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் LKG வகுப்பு

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை தொடங்கி வைத்தார். 

Last Updated : Jan 21, 2019, 12:00 PM IST
தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் LKG வகுப்பு title=

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை தொடங்கி வைத்தார். 

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி விழாவில் கூறினார்.

Trending News