கிட்டத்தட்ட முழு நாடும் கொரோனா வைரஸின் பிடியில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
அதேசமயம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று புதிதாக சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த 5 பேரில், 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் சுற்றுலா வழிகாட்டி. இதனை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
Five news cases of #COVID19 positive in Tamil Nadu. Four Indonesian nationals & their travel guide from Chennai tested positive at Salem Medical College. They are quarantined since March 22: Dr C Vijayabaskar, Tamil Nadu Health Minister (File pic) pic.twitter.com/fFd06PbL3m
— ANI (@ANI) March 25, 2020