மதுரையில் அமையவுள்ள நூலகம் அதிநவீன முறையில் இருக்கும்.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, 'ஆண்டறிக்கைகள் மற்றும் புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் லாரி, லாரியாக பழைய பேப்பர் கடைகளுக்கு கொண்டு சென்று எடைக்கு போடப்படுகிறது எனக்கூறிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2021, 09:14 PM IST
மதுரையில் அமையவுள்ள நூலகம் அதிநவீன முறையில் இருக்கும்.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் title=

சென்னை: "மதுரையில் அமையவுள்ள நூலகமானது "அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாக இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel thiyagarajan) சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டு நாட்களாக  நடைபெற்று வருகிறது. அப்போது அது குறித்து பேசிய எதிர்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் ராஜன் செல்லப்பா (Rajan Chellappa), "காகிதமில்லா பட்ஜெட் என்பது வரவேற்க கூடியது தான் என்றாலும் ஊடகங்கள், பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு உடனடியாக செய்தியை கொண்டுவர வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களும் வாசித்து குறிப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

இது தவிர கவிஞர்கள், படைப்பாளிகளின் சிந்தனையும் குறைந்திட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே காகித முறையும் தேவை என்றும், அது போக மதுரையில் கட்டப்படும் நூலகம் முழுவதும் "டிஜிட்டல் மையமாக" மாற்ற வேண்டியதில்லை என்று கூறினார்.

ALSO READ | பிடிஆர் vs வானதி ஸ்ரீனிவாசன்: சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியமான கேள்வி பதில்கள்

அ.தி.மு.க (AIADMK) உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும் போது இடையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு "சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்காக அச்சடிக்கப்படும் துறைவாரியான ஆண்டறிக்கைகள் மற்றும் புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் லாரி, லாரியாக பழைய பேப்பர் கடைகளுக்கு கொண்டு சென்று எடைக்கு போடப்படுகிறது.

இதனால் அரசுக்கு தான் பணம் விரயமாகிறது‌. அந்த செலவை குறைப்பதற்கு தான் இ பட்ஜெட் முறை தாக்கல் செய்யப்படுகிறது. குறைந்த அளவில் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு பேரவையில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது இதனையும் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

மேலும் பேசிய அவர், காகித முறை என்றால் ஒரு நூலகங்களில் சுமார் 10 லட்சம் புத்தகங்களை மட்டுமே பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதுவே டிஜிட்டல் முறை என்றால் "ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்க முடியும். இதன் அடிப்படையில் மதுரையில் அமையவிருக்கும் நூலகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்படும். தவிர காகித முறையிலும் அங்கு நூல்கள் இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

ALSO READ | TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News