FICCI FLO நிறுவன விழாவில் ராம்ப் வாக் நடை போட்ட மாற்றுத்திறனாளி பெண்கள்!

FICCI FLO நிறுவனத்தின் சார்பில் சென்னையில் ஸ்பார்க் ஃபெஸ்டிவ் எடிட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்டு ராம் வாக் செய்தனர். 

Written by - Yuvashree | Last Updated : Sep 9, 2023, 04:12 PM IST
  • FICCI FLO நிறுவனத்தின் சார்பில் ஸ்பார்க் ஃபெஸ்டிவ் எடிட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார்.
  • இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.
FICCI FLO நிறுவன விழாவில் ராம்ப் வாக் நடை போட்ட மாற்றுத்திறனாளி பெண்கள்!  title=

சென்னை FICCI FLO சார்பில் நடத்தப்பட்ட  ஸ்பார்க் ஃபெஸ்டிவ் எடிட் நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், FICCI FLO சென்னை தலைவர் ராஜி ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

சென்னை சவேரா விடுதியில் நடைபெற்ற FICCI FLO ஸ்பார்க்  ஃபெஸ்டிவ் எடிட் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சார கொண்டாட்டமாகும்.   கலைத்திறன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் நேர்த்தியான கலவையான இந்த நிகழ்ச்சி, FICCI FLOவின் உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோரால் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் காட்சிபேழையாகவும் அமைந்தது.  

மேலும் படிக்க | ’அவரு ஒரு மன நோயாளி’ கொடநாடு கொலை வழக்கில் புதிய குற்றச்சாட்டு

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நடைபெற்ற ரேம்ப் வாக்கில் FLO உறுப்பினர்களுடன் மாற்றுத்திறனாளி பெண்கள் கண்கவர் நடைபோட்டு அசத்தினர். பாலம் சில்க்ஸ், காவேரி, ரஹானே உள்ளிட்ட நிறுவனங்களின் கண்கவர் ஃபேஷன் ஷோ வும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியதும். மேலும் ஆந்திரா மகிளா சபா சார்பில் மாற்றுத்திறனாளி நபர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் ஸ்டாலை ஏற்பாடு செய்திருந்தது. 

ஒட்டுமொத்தமாக மாற்றுத்திறனாளி, சிறப்புத்திறன் பெண்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்த பெண் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படும் FICCI FLO வின் இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த FICCI FLO சென்னையின் தலைவர் ராஜி ராஜு, ரச்சனாப்குமார் மற்றும் அபர்ணா வித்யானாத் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க | G20 Dinner: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News