ஈஷாவின் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்

ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2020, 09:50 PM IST
  • ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
  • மொத்தம் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈஷாவின் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள் title=

ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

ஈஷா அறக்கட்டளை (Isha Foundation) நடத்தும்  ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று (டிசம்பர் 20) சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்படுத்துகள் வழிமுறைகள் குறித்து செயல் முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மொத்தம் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட வகுப்புகள் மூலம் 8.700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை (Tamilnadu) இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் ஈஷா (Isha) விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்தப் பயிற்சியில் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் களப் பயிற்சி அளிக்கப்பட்டன. 

ALSO READ | “மரம் நட விரும்பு” – மர ஆர்வலர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் ஈஷா..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News