முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை - நகையை விற்கும் போது சிக்கிய திருடன்!

கேரள மாநிலம் கொல்லத்தில் முன்னாள் அமைச்சர் பேபி ஜானின் வீட்டை உடைத்து 53 பவுன் நகைகளை கொள்ளையடித்த நாகர்கோவிலை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 11, 2022, 01:37 PM IST
  • முன்னாள் அமைச்சரின் வீட்டில் 53 சவரன் நகை கொள்ளை
  • திருடிய நகைகளை அடகு வைக்க முயன்றபோது சிக்கிய திருடன்
  • சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் துணிகரம்
முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை - நகையை விற்கும் போது சிக்கிய திருடன்! title=

கேரளாவில் புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர் பேபி ஜான். இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான வீடு கொல்லம் உபாசனா நகரில் உள்ளது. பேபி ஜானின் மகன் ஷிபு பேபி ஜான். இவரும் கேரள காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 

இவர் தனது பூர்வீக வீட்டுக்கு அருகே புதிதாக ஒரு வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேபி ஜான் மறைந்த பிறகு அவரது மனைவி அன்னம்மா மட்டும் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் அவரும் இரவு நேரத்தில் அருகில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.  

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று காலையில் பூர்வீக வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அன்னம்மா, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முதல் மாடியில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 53 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. 

தகவலறிந்து வீட்டிற்கு வந்த ஷிபு பேபி ஜான் உடனடியாக கொல்லம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டில் இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றவாளி தமிழகத்திற்கு தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் எல்லை பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். 

மேலும் படிக்க | முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை

இந்த நிலையில், நாகர்கோவில் பகுதியில் உள்ள அடகு கடைக்கு ஏராளமான நகைகளுடன் வந்த நபர் ஒருவர், இவை தனது பெற்றோரின் நகை எனவும் அவசர தேவைக்காக விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் சந்தேகமடைந்த அடகு கடை உரிமையாளர் இது குறித்து நாகர் கோவில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

உடனடியாக நாகர்கோவில் போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் மொத்தமாக 53 சவரன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ் எனும் ராசாத்தி ரமேஷ் என்பதும் கேரள முன்னாள் அமைச்சர் வீட்டில் கைவரிசை காட்டியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராசாத்தி ரமேஷையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகளையும் கேரள போலீசாரிடம் நாகர்கோவில் போலீசார் ஒப்படைத்தனர். ஏற்கெனவே பாலக்காட்டில் ஒருவீட்டில் கொள்ளையடித்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் அண்மையில் வெளியில் வந்து இரவு நேரங்களில் பூட்டப்பட்டு கிடந்த பேபி ஜானின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் படிக்க | பெண்களை குறிவைத்து மோசடி செய்த ’கில்லாடி’ கொள்ளையன் கைது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News