பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 5, 2019, 11:40 AM IST
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை title=

சென்னை: பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை.

கஸ்தூரிரங்கன் குழுவினர் பரிந்துரை செய்த புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி இந்தி பேசா மாநிலங்களில் மூன்றவாவது மொழியாக இந்தி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. 

ஆனால் அனைத்து மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்று பற்றால், தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாணவர்கள் தேர்வு செய்ய முடியும், அதன் மூலம் தமிழ் மொழி மற்ற இந்திய மாநிலங்களில் வளர்ச்சி அடையும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும்" என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். 

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்ப்பாரா பிரதமர் மோடி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending News