இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2023, 06:52 AM IST
  • மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • சென்னை மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! title=

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சற்று அதிகமாக பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் நிற்காமல் பெய்தது.  காலையில் பலத்த மழையாக மாறியது.  சென்னையில் உள்ள பல சாலைகள் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டன.  இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடசென்னை சுற்றுவட்டார பகுதிகளான திருவெற்றியூர் தண்டையார்பேட்டை வியாசர்பாடி பெரம்பூர் மாதாவரம் மணலி ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.  மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் கணிசமாக உயர தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சி தலைவருக்கே இந்த நிலைமையா? ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!

நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக  மிதமான சாரல்மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யாது போனது.  அதனை தொடர்ந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து காணப்பட்டது.  அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான சாரல்மழை பெய்தது.  மேலும் இந்த மழையானது தேனி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், எ.புதுப்பட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான சாரல்மழை பெய்தது.

இந்நிலையில்  தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மிதமான சாரல் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதேபோல அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 11 மணி முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் எனவும், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 11மணி  முதலே அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழுர், மீன்சுருட்டி, சிலால். வானதிரையன்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மம் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News