நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம். இவருக்கு வயது 28. கடந்த மாதம் 12ஆம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீர் காத்தலிங்கத்தை கைது செய்தனர்.
மேலும் படிக்க | கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது, இரண்டாவது முறையாக நீர் காத்தலிங்கம் ஜாமீன கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீர்க்காத்த லிங்கத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் நீர் காத்தலிங்கம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு நெல்லை டவுன் அருகே உள்ள குறுக்குத்துறை டாஸ்மாக் மதுபான கடையை சுத்தம் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் நீர் காத்தலிங்கம் செய்யும் பணியினை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ