JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, திமுக இளைஞரணி தலைவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மாணவர் சங்க தலைவர் ஐஷா கோஷ் உடன் சந்திப்பு நடத்தினார்.
கடந்த ஜனவரி 5 அன்று மாலை, JNUSU தலைவர் ஐஷா கோஷ் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் JNU வளாகத்திற்குள் வைத்து முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். JNU-க்குள் நுழைந்து மாணவர்களையும், பேராசிரியர்களையும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கிய அந்த மர்ம கும்பல் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இதுவரை உன்மையான குற்றாவளி யார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
Delhi: DMK youth wing leader and son of MK Stalin, Udhayanidhi Stalin and other party leaders met and interacted with students in Jawaharlal Nehru University over January 5 violence in the campus. pic.twitter.com/jHfjvyLyQp
— ANI (@ANI) January 12, 2020
இந்நிலையில் தற்போது JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
JNU வன்முறையில் தாக்கப்பட்ட மாணவர்களை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக MP கனிமொழி நான்கு நாட்கள் முன்னதாக JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை நேரில் சந்தித்து தனது ஆதரவினை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயன், JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை டெல்லி கேரளா இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மாணவர்களின் போராட்டம் எப்போதும் வீனாகாது எனவும் தெரிவித்தார்.
அந்த வரிசையில் தற்போது JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, திமுக இளைஞரணி தலைவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, JNU கலவரத்திற்கு சில ஆர்வலர் மாணவர்களே காரணம் எனவும், சிலரது புரட்சியால் அப்பாவி மாணவர்களின் கல்வி பாதிக்கிறது எனவும் JNU துணை வேந்தர் மாமிடலா ஜகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வளாகத்திற்குத் திரும்பி கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்., "ஜனவரி 13 முதல் வகுப்புகள் தொடங்குவதால் அனைத்து மாணவர்களும் வளாகத்திற்குத் திரும்பி குளிர்கால செமஸ்டருக்கான பதிவுகளைபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமையன்று மாணவர்களுடனும் உரையாடிய துணை வேந்தர், இதன் போது ஆசிரியர்கள் குழுவால் ஆதரிக்கப்படும் சில ''ஆர்வலர் மாணவர்கள்'' பிரச்சினையை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர், மாணவர்களை விடுதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். சில ஆர்வலர்கள் உருவாக்கிய பயங்கரவாதம், எங்கள் மாணவர்கள் பலர் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு சென்றது. எங்கள் வளாகம் அமைதியான வளாகம் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் ஆர்வலர்களின் செயலால் அமைதியற்று கிடக்கிறது" என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.