DMK+VCK: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க இறுதி முடிவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2019, 01:58 PM IST
DMK+VCK: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் title=

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வருகின்றனர். சில கட்சிகள் தனியாகவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக பிரதான கட்சிகளாக இருப்பதால், இந்த கட்சிகளுடன் யார் யார் கூட்டணி சேருவார்கள், அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டணியுடன் விரைவில் தேமுதிக இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

தற்போது திமுக கூட்டணியை பொருத்த வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க திமுக முடிவு செய்ததாகவும், ஆனால் விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதி கேட்டதாகவும், அதனால் தான் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என தகவகள் வெளியாகின. 

இந்தநிலையில், இன்று திமுக மற்றும் விசிக தொடர்ந்து பேச்சுவாரத்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்ப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க இறுதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் விசிக திமுக சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து அறிவிப்பு நாளை அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

திமுகவுடன் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News