ரஜினியின் கபாலி டீசரை பயன்படுத்தி அதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி அதிமுகவை விமர்சிப்பது போலவும் திமுகவை ஆதரிப்பது போலவும் உள்ளது. அந்த வீடியோ திமுகவை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
அந்த வீடியோவில் அதிமுக என காண்பிக்கப்படும் வில்லன் யார்ரா திமுக என கேள்வி கேப்பது போலவும். அதற்கு திமுக பதில் சொல்லவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பிடு போடும் அடியாள் அல்ல என ரஜினி கூறிய வாரத்தையை மாற்றி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் மற்றும் எம்.எல்.ஏக்களும் கும்பிடு போடுவதாக அமைக்கப் பட்டுள்ளது. கடைசியா ரஜினி கூறும் நான் கபாலிடா என்ற வாரத்தையை மாற்றி எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்யற திமுகடா என அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் இருப்பது போல போட்டோக்களும் இடம்பெற்றுள்ளன. டப்பிங் செய்தவர் சவுண்ட் உருவாக்குவதில் தடுமாறியுள்ளார். ஆனால் ரஜினியின் உதடு அசைவு திமுகவின் உடன்பிறப்புகள் உருவாக்கின இந்த வீடியோவுக்கு பொருத்தமாக உள்ளது.
கபாலி படத்தின் புகழை வைத்து திமுகவுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது போல இந்த வீடியோ ஒருவாக்கப்பட்டு உள்ளதால். இந்த தேர்தலில் இது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.