ஆளுநர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் கருப்புகொடி எந்தி ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீப காலமாக தமிழகம் முழுவது ஆய்வு செய்து வருகின்றார். முன்னதாக கடலூரில் அவர் ஆய்வு செய்கையில் அவருக்கு எதிர்புகள் வலுத்தது குறிப்பிடத்தக்கது!

Last Updated : Jan 21, 2018, 12:35 PM IST
ஆளுநர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் கருப்புகொடி எந்தி ஆர்ப்பாட்டம்! title=

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீப காலமாக தமிழகம் முழுவது ஆய்வு செய்து வருகின்றார். முன்னதாக கடலூரில் அவர் ஆய்வு செய்கையில் அவருக்கு எதிர்புகள் வலுத்தது குறிப்பிடத்தக்கது!

சமீபத்தில் கோவையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அவர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அத்துடன் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று தருமபுரியில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார். ஆனால் அவரது வருகைக்கு தி.மு.க -வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநரின் வருகையை எதிர்த்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி தரும்புரியின் ஒட்டப்பட்டி பகுதியில் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  இதனால் தி.மு.க -வினருக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Trending News