சென்னை: கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு வேற கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, இன்று டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மூன்று எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக மனு அளித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டபேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது என்ற மனுவை அளித்தார்.
ஏற்கனவே பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தி.மு.கழகம் கொண்டு வருவோம் என திமுக தலைவர் மு.க. எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.