தமிழக சட்டசபை தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும். கருணாநிதி வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தமிழக அரசு சட்டசபையை கூட்ட மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் கருணாநிதியின் பணிகள் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவை. கருணாநிதியின் பெருமைகள் சட்டபேரவையில் பதிவிடக்கூடாது என ஆளும் அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க பேரவையைக் கூட்ட வேண்டும் திமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும் கருணாநிதி வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
உடனடியாக தமிழக சட்டபேரவை கூட்டம் கூட்ட வேண்டும் எனவும், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை குறித்தும், நீட் தேர்வின் நிலை குறித்தும் விவாதிக்க பட்டதாகவும் கூறினார்.
We want the TN assembly to be convened immediately, to discuss many serious issues including workers strike and NEET: MK Stalin pic.twitter.com/VmbPnVu9M4
— ANI (@ANI_news) May 16, 2017