திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்...

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்..

Last Updated : Jun 14, 2019, 09:50 AM IST
திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்... title=

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்..

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி (வயது 67) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். 

கடந்த சில வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராதாமணி. அவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Trending News