'நீதிமன்ற தீர்ப்பு பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி' - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிற மதத்தினர் பங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jul 4, 2022, 05:27 PM IST
  • இந்து கோயில்களில் பிற மத்தினர் நுழைய எதிர்ப்பு
  • தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு
'நீதிமன்ற தீர்ப்பு பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி' - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம் title=

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (6-ம் தேதி)  நடைபெறுகிறது. இந்த  திருவிழாவுக்காக ஏராளமான பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கோயில்களில் இந்து மத்தினரை தவிர்த்து மாற்று மத்தினர் நுழையக் கூடாது என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமீப நாட்களாக கூறிவருகின்றனர். 

இதனிடையே இந்த கும்பாபிஷேகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்க உள்ளதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என குமாரகோவில் பிரம்மபுரத்தை சேர்ந்த சி.சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். 

அதில், ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இந்நிலையில், கும்பாபிஷேகத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்.

மேலும் படிக்க | அந்தமானில் ஒரே நாளில் 6வது நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

கும்பாபிஷேக விழா அரசு விழாவாக நடைபெறும் போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படாமல் கோவிலில் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு இன்று விசாரித்தது. கும்பாபிஷேக விழாவில் இந்து மதத்தை சேராதவர்கள் பங்கேற்க கூடாது என எந்த விதிமுறைகளும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் நாகூர் தர்காவில் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபடுவதையும், இந்து கோயில்களில் ஏசுதாஸ் படிய பாடல்கள் ஒலிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், ''எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி!பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது. மதுரை நீதிமன்றத்தின் கருத்து தான் பொதுமக்கள் அனைவருடைய கருத்து!'' என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

 

 

மேலும் படிக்க | இந்திய விமானப்படையின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News