அதிமுக-வுக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன் -MK ஸ்டாலின்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெறும் பேரணிக்கு விளம்பரம் தேடி தந்துள்ள அதிமுக-வினருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 23, 2019, 10:40 AM IST
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறது.
  • அப்படி நடத்தக்கூடிய அந்தப் பேரணிக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை, ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக இன்றைக்குத் தேடித் தந்திருக்கிறது. அதற்காக முதலில் அதிமுகவுக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன்.
அதிமுக-வுக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன் -MK ஸ்டாலின்! title=

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெறும் பேரணிக்கு விளம்பரம் தேடி தந்துள்ள அதிமுக-வினருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பேரணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிட்டப்படி திமுக பேரணி நடைபெறும் என செய்தியாளர்களிடன் முன்னதாக தெரிவித்தார். அப்போது மேலும் அவர் தெரிவிக்கையில்., குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறது. அப்படி நடத்தக்கூடிய அந்தப் பேரணிக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை, ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக இன்றைக்குத் தேடித் தந்திருக்கிறது. அதற்காக முதலில் அதிமுகவுக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். 

எப்படியாவது இந்த பேரணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என திட்டமிட்டு ஆளுங்கட்சியினரை சிலரைப் பயன்படுத்தி, அவர்கள் மூலமாக நீதிமன்றத்திற்குச் சென்று அவசர அவசரமாக நீதிபதியின் இல்லத்திற்கே சென்று இதை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எங்களுக்கு நீதிபதியிடத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆகவே நாங்கள் அதிலே பங்கேற்கவில்லை. 

ஆனால் தற்போது எங்களுக்கு வந்திருக்கக்கூடிய செய்தி, இதை விசாரித்த நீதிபதி, இதற்கு தடை விதிக்க முடியாது. என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். எனவே, இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, நீதிமன்ற விதிமுறையின்படி அவர்கள் வகுத்து தந்திருக்கக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு, அண்ணா வழியில், அந்தப் பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்தவிருக்கிறோம்.

ஆனால் அதையும் மீறி நீதிமன்றம் இதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. இதற்கு தடை விதிக்கவில்லை. ஆகையால் இது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. இந்தப் பேரணி எப்படி மிகப்பெரிய வெற்றியை அடைய இருக்கிறது என்பதற்கு இன்றைக்கே அது அடையாளமாக வெளிவந்திருக்கிறது.

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என, புதுச்சேரி முதலமைச்சர், மேற்கு வங்க முதலமைச்சர், கேரள முதலமைச்சர் இவர்களிடம் போய் இங்குள்ள முதலமைச்சரைப் பாடம் படிக்கச் சொல்லுங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News