ஜனவரி 4 திமுக பொதுக்குழு கூடுகிறது

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 26, 2016, 12:49 PM IST
ஜனவரி 4 திமுக பொதுக்குழு கூடுகிறது  title=

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெற இருப்பதாக இருந்தது தள்ளி வைக்கப்பட்டது.

இந்தாண்டில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி காலை 9 மணிக்கு கூட இருப்பதாகவும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை ​வகிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

தற்போது, அக்கட்சியின் பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது.

Trending News