திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் - எந்தெந்த தொகுதிகள்?

DMK: கனிமொழி உள்ளிட்ட 5 திமுக சிட்டிங் எம்பிகள் விரைவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2024, 09:53 PM IST
  • விரைவில் நாடாளுமன்ற தேர்தல்
  • 6 திமுக சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம்
  • கனிமொழி தூத்துக்குடியில் போட்டி
திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் - எந்தெந்த தொகுதிகள்? title=

திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் சுறுசுறுப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரையும் இறுதி செய்துவிட்டதாம். கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டவுடன், அதேவேகத்தில் இப்போது இறுதி செய்து வைத்திருக்கும் வேட்பாளர்கள் பெயரையும், அவர்கள் போட்டியிட இருக்கும் தொகுதிகளையும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் என்ற பெயரில் அறிவிக்க இருக்கிறது திமுக. இப்போது, திமுக எம்பிகளாக இருக்கும் கனிமொழி உள்ளிட்ட 5 பேர் மீண்டும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியின் வேட்பாளராக களமிறங்க இருக்கும் நிலையில், அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட இருப்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது சூசகமாக உறுதி செய்துவிட்டார். "இந்த தொகுதியில் திமுக சார்பில் எம்பி தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள்? என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால் அவரை கடந்த முறை பெற்ற வாக்கு வித்தியாசங்களை விட இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என பேசினார். அவர் அவ்வாறு கூறும்போதே தயாநிதி மாறன் தான் எல்லோருக்கும் புரிந்து விட்டது. அத்துடன் நிச்சயமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிறோம் என திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கூறினர். 

மேலும் படிக்க | மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்

டிஆர் பாலு

திமுகவின் பொருளாளராக இருக்கும் டிஆர் பாலு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு எம்பி தேர்தலிகளில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மட்டும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டி தோல்வி அடைந்தார். இம்முறையும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை இவரை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் போட்டியிட்டார். ஆனால் அவரை விட 34 விழுக்காடு வாக்குகள் அதிகமாக பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அதே நம்பிக்கையில் அந்த தொகுதியில் களமிறங்குகிறார்.

ஜெகதரட்சகன்

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஜெகதரட்சகனுக்கு அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 1999 மற்றும் 2009, 2019 ஆகிய தேர்தல்களில் இந்த தொகுதியில் இருந்து தான் எம்பியாக தேர்தெடுக்கப்பட்டார். அந்தளவுக்கு அவருக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அரக்கோணம் செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்தாலும், கடந்த முறை அக்கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் ஏ.கே.மூர்த்தியை தோற்கடித்து ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார்.

ஆ.ராசா

திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். 1996, 1998 மற்றும் 1999 என  முறை பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இதில் 1998  ஆம் ஆண்டை தவிர மற்ற இருமுறையும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இது அவருடைய சொந்த தொகுதி. ஆனால், 2009 ஆம் ஆண்டு நீலகிரி தொகுதிக்கு மாறிய அவர், அந்த முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு அந்த தொகுதியில் தோல்வியை தழுவினாலும், 2019 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் நீலகிரி தொகுதியிலேயே அவர் போட்டியிட இருக்கிறார். 

கனிமொழி

கனிமொழி 2007 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது, மக்கள் நேரடியாக வாக்களிக்கும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் 2019  ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அவர் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட, தற்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் 30 விழுக்காடு வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். இம்முறையும் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் களமிறங்க இருக்கிறார். மழை வெள்ள பாதிப்பின்போது தொகுதியிலேயே முகாமிட்டு மக்களுக்கான பணிகளை செய்ததால் அவருக்கான வெற்றி வாய்ப்பும் அந்த தொகுதியில் பிரகாசமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | கூட்டணிக்கு தவம் கிடக்கும் பாஜக... ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News