மேகதாது அணை விவகாரம்: திருச்சியில் ஆர்பாட்டம் நடத்தும் திமுக!

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் வரும் டிசம்பர் 4-ஆம் நாள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 29, 2018, 01:23 PM IST
மேகதாது அணை விவகாரம்: திருச்சியில் ஆர்பாட்டம் நடத்தும் திமுக! title=

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் வரும் டிசம்பர் 4-ஆம் நாள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திமுகவின் அழைப்பினை ஏற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைப்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

கூட்டம் முடிந்த பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்... மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி திருச்சியில் வரும் 4-ஆம் தேதி அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். 

நேரம் இன்மை காரணமாக மற்ற கட்சிகளை அழைக்காமல், ஒத்த கருத்துக்களை கொண்ட கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தினோம். 

புயலால் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சி பேதங்களை கடந்து அனைத்துக் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். 

பாஜக, அமமுக-வினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் வரவேற்போம்" என தெரிவித்துள்ளார்.

Trending News