அதிமுக-வின் இரு அணிகளுக்கு இடையிலான 18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக-விற்கு கவலையில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத 20 தொகுதிகளில் உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக இரு பிரிவு அணி போட்டியின் போது முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழகத்தின் அப்போதைய ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்தாதக டிடிவி தினகரன் ஆதரவு MLA-க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியாதால் 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து விசாரணையை தொடங்கினார். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் .
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் 18 MLA-க்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் எனவும், தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் தெரவித்தார்.
இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தீர்ப்பு குறித்து கவலையில்லை, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என தெரிவித்தார்.