இந்நூற்றாண்டின் தலைவன் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

சமூகநீதியில் தமிழ்நாடு மட்டும் தனித்துவம் பெற முதற் காரணமாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று... அவருக்கு மரியாதையை செலுத்திய திமுக-வினர்.

Last Updated : Feb 3, 2020, 11:01 AM IST
இந்நூற்றாண்டின் தலைவன் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை title=

சென்னை: இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று! அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்! என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்.

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை ஒட்டி தி.மு.க. சார்பில் சென்னையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். இந்த பேரணியில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணி இன்று காலை 8 மணி அளவில் வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் இல்லம் அருகே தொடங்கி மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை சென்றது.

அண்ணா நினைவிடம் சென்ற திமுக-வினர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு, அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று! 

அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்!" எனக் கூறியுள்ளார்.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News