Dayanidhi Maran Lok Sabha Election Campaign 2024 : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை சூராவளி வேகத்தில் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், தனது பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என கூறினார்.
தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரம்..
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக சென்று தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாஜக தலைவர்கள்,மத்திய அமைச்சர்கள் எல்லாம் தேர்தல் வரும் போது மட்டுமே தமிழகம் வருவதாக தெரிவித்தார்.
பாஜக-அதிமுக கள்ள உறவு..
பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் கள்ள உறவு இருப்பதாக கூறிய அவர், அதிமுக நேரடியாக போட்டியிடாத. இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பாஜகவிற்க்கு தேர்தல் வேலை செய்வதாக தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் என்றும் பாஜக சொல்வதும் இல்லை செய்வதும் இல்லை என கூறினார். சிஏஜி அறிக்கைப்படி ஊழல் முறைக்கேடு நடந்துள்ளது தெரிந்த பிறகும்,அமலாக்கதுறை, சிபிஐ ஏன் விசாரிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் லீவு! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ