கர்நாடகா பந்த்: காவிரி போராட்டத்துக்கு மூலகாரணமே பாஜக தான் - திமுக பகிரங்க குற்றச்சாட்டு

கர்நாடகாவில் நடைபெறும் காவிரி நீர் திறப்புக்கு எதிரான போராட்டத்துக்கு காரணம் பாஜக என திமுக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2023, 02:54 PM IST
  • கர்நாடகாவில் பந்த்
  • பாஜக தான் காரணம்
  • திமுக பகிரங்க குற்றச்சாட்டு
கர்நாடகா பந்த்: காவிரி போராட்டத்துக்கு மூலகாரணமே பாஜக தான் - திமுக பகிரங்க குற்றச்சாட்டு title=

தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மோதல் நீடித்து வருகிறது. இப்போது இந்தப் பிரச்சனை உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசு, காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு குறைந்தளவிலான நீரை திறந்து வருகிறது. இதற்கும் அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அம்மாநில பாஜகவினர் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கக்கூடாது என்று போரக்கொடி உயர்த்தியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.  

மேலும் படிக்க | பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்!

கர்நாடகாவில் பந்த்

அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கக்கூடாது என பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராடத்தில் பங்கெடுத்திருப்பதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். அரசியல் தளத்தில் தமிழ்நாடுக்கு காவிரி நீரை திறக்கும் காங்கிரஸ் அரசு, மாநில மக்களுக்கு துரோகத்தை இழைப்பதாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதனால் தமிழ்நாடு - கர்நாடகாவின் எல்லையோர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருமாநிலங்களின் வர்த்தக உறவும் முழுமையாக தடைபட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

திமுக குற்றச்சாட்டு

இதற்கு பதில் அளித்திருக்கும் திமுக, காவிரி நீரை கர்நாடகா மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளது. காவிரி நீர் 4 மாநில மக்களுக்கு உரித்தானது என தெரிவித்திருக்கும் அக்கட்சி, இது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மேலும், காவிரி நீர் பிரச்சனை பல ஆண்டுகளாக இருக்கும் இருமாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை என்றாலும் இப்போது அம்மாநிலத்தில் எழுந்திருக்கும் பிரச்சனைக்கு பாஜகவே காரணம் எனவும் திமுக குற்றச்சாட்டியுள்ளது. 

பாஜக தான் மூலகாரணம்

திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் இது குறித்து பேசும்போது, கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்துக்கு முழு காரணம் பாஜக. அம்மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், மக்களை திசை திருப்பவும் அரசியல் லாபத்துக்காகவும் இப்படியான மலிவான அரசியலை அக்கட்சி முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தவே காவிரி நீர் போராடத்துக்கு எண்ணெய் ஊற்றி எரிய வைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் இளங்கோவன், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் உரிமையை திமுகவும், தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | வாச்சாத்தி வழக்கு: 30 வருட போராட்டத்துக்கான அதிரடி தீர்ப்பும்... பின்னணியும்! - வென்ற நீதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News