சென்னை: தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், "பெண்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.@CMOTamilNadu pic.twitter.com/1fzOMhg8UD
— Vijayakant (@iVijayakant) May 8, 2020
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனம், கடைகள், உட்பட பல சேவைகள் தடை செய்யப்பட்டது. அதில் ஒன்று மதுபானக் கடைகளை மூடுவது.
மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை முதல் ஊரடங்கு போடப்பட்டது. ஆனால் நாட்டில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தால் மீண்டும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், மூன்றாவது முறையாக ஊரடங்கை மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று மதுபானம் விற்பனையை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானாக் கடைகள் திறக்கப்பட்டதால், ஊரடங்கு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்ட தூரம் வரை நீண்ட வரிசை கடைகளுக்கு முன்னால் காணப்பட்டது.
இதனைதொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர்.
இதன்பின்னர் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டசமாக் கடைகள் திறக்கக்கூடாது எனத் தீர்ப்பளித்தது.