Tamil Nadu firecracker Guidelines | தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இப்போதே துணிக்கடை, பட்டாசு கடைகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பிலும் தீபாவளி பண்டிக்கைக்கான நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் செய்யப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு, முக்கியமான இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, துணிக்கடைகள், பட்டாசு கடைகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவது என அனைத்து துறைகளும் அறிவிப்பு மற்றும் அறிக்கைகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. தீபாவளி சிறப்பு பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடவே மிக முக்கியமாக கூட்டுறவுத்துறை சார்பில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையும் தொடங்கியுள்ளது.
தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்கம் : நாகையில் தமிழ்நாடு அரசின் தீபாவளி பட்டாசு விற்பனையை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தானிய கிடங்கை ஆய்வு செய்த அவர், நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருக்கும் அரிசியின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூடுதல் விலைக்கு பட்டாசு விற்பனை செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தார். "கனமழை பாதிப்பை எதிர்கொள்ள நாகை 380 நியாய விலை கடைகளில் அரிசி, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு : நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 200 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வேளாண் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயித்து இதுவரை 13 ஆயிரம் விவசாயிகளுக்கு 81 கோடி ரூபாய் விவசாயக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4.02 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3027 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் ஆண்டில் 35 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14500 கோடி வேளாண் கடன் இலக்கு நிர்ணயித்து இதுவரை 6500 கோடி ரூபாய் வேளாண் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் சுமார் 2500 கடைகள் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
பட்டாசு விற்பனை எச்சரிக்கை : 5 கிலோ அரிசி அடங்கிய 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள அரசி மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க 39 ஆயிரம் தார்பாலின்கள் தயார் நிலையில் உள்ளது. கூட்டுறவு வெடி கடைகளில் தரமான வெடிகள் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலையில் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என" கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ