சொத்துக் குவிப்பு வழக்கு: அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை

Last Updated : Apr 17, 2017, 05:22 PM IST
சொத்துக் குவிப்பு வழக்கு: அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை title=

1991 முதல் 96 வரை அதிமுக முன்னாள் அமைச்சர் (கல்விதுறை) அரங்கநாயகத்துக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவரது பதவி காலத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, இரு மகன்கள் பெயரிலும் அவர் ரூ. 1. 5 கோடி சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் விசாரித்தது. 

ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அரங்கநாயகம் உள்பட 4 பேர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், வழக்கில் இருந்து இவர்களை விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கும் ஆதாரங்கள் இருப்பதால் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

ஆனால் அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் விடுவிக்கப்பட்டனர். 

Trending News