அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கி சூடு -டிஜிபி பதில் மனு!

ஆட்சியர் அலுவலகத்தின் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனு!

Last Updated : Jul 2, 2018, 06:10 PM IST
அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கி சூடு -டிஜிபி பதில் மனு! title=

ஆட்சியர் அலுவலகத்தின் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். 

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது சரியாக இருக்கும் என்று தெரிவித்தனர். 

இந்நிலையில், துப்பாக்கி சூடு குறித்து அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், த்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்க்கு தமிழக டிஜிபி பதில் மனு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி பதில் மனு கொடுத்துள்ளர். அந்த மனுவில், அவர் தெரிவித்துள்ளதாவது...! 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனவும் உயர்நீதிமன்றத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனு கொடுத்துள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் குடியிருப்பில் 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது எனேவும் அந்த பதில் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News