இதுவே திராவிட மாடல்...! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த காட்சியை பதிவிட்டு இதுவே திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Last Updated : May 19, 2022, 08:38 PM IST
  • சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் பக்தர்கள் அனுமதி
  • இதுவே திராவிட மாடல் ஆட்சி
  • அமைச்சர் சேகர் பாபு ட்வீட்
இதுவே திராவிட மாடல்...! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட்  title=

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பம்சமாகும். இக்கோயிலின் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது. 

கொரோனா தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. 

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி

ஆனால் சிதம்பரம் கோயிலில் கொரோனா காலத்தின் போது பக்தர்கள் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

ஆனால் பக்தர்கள் கனகசபை மேடையில் ஏறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீட்சிதர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், பல்வேறு பொது நல இயக்கங்கள் ஆலயத்தின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

chidambaram natarajar temple

இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் பட்ட போலீசார் கோவிலின் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கனகசபை மேடையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் கனகசபை மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பினர்.

chidambaram natarajar temple

இந்த காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இதுவே திராவிட மாடல் ஆட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க | தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News