கஜா புயலால் பாதித்த பகுதிகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு...

கஜா புயல் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு செய்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.....

Last Updated : Nov 28, 2018, 02:24 PM IST
கஜா புயலால் பாதித்த பகுதிகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு... title=

கஜா புயல் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு செய்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.....

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 'கஜா' புயல் தாக்கம் அதிகம் இருந்தபோதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி கஜா பாதிப்பு மிகஅதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, புயலால் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தும் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். இதையடுத்து, கஜா புயல் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு செய்ய செய்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.   

 

Trending News