அவதூறு வழக்கு: ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

- பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். "அதற்காக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல" விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 24, 2016, 02:29 PM IST
அவதூறு வழக்கு: ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் title=

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கூறியதாவது:- பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். "அதற்காக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல" விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அவதூறு வழக்குகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்குவுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம் அளித்துள்ளது. 3 வாரத்தில் ஜெயலலிதா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை  அடுத்த மாதம் செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Trending News