தேர்தல் கணிப்புகளை கலாய்த்த தயாநிதி அழகிரி - லைக் செய்த வெங்கட்பிரபு

தமிழ் திரைப்படங்களின் கலெக்ஷன்போல் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடிச்சுவிடப்பட்டிருப்பதாக தயாநிதி அழகிரி டவிட்டரில் பங்கமாக கலாய்த்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2022, 02:33 PM IST
  • 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது
  • கருத்துக் கணிப்புகளை கலாய்த்த தயாநிதி
  • லைக் செய்த இயக்குநர் வெங்கட்பிரபு
தேர்தல் கணிப்புகளை கலாய்த்த தயாநிதி அழகிரி - லைக் செய்த வெங்கட்பிரபு title=

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. இதனால், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் களம் காணும் பா.ஜ.க ஆட்சிக் கட்டிலில் ஏறுவது மிகவும் கடினம் என்று பல கருத்து கணிப்புகள் கூறின. 

மேலும் படிக்க | அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா! வைரலாகும் வீடியோ!

அதேநேரத்தில், பா.ஜ.கவுக்கு மாற்றாக சமாஜ்வாதி கட்சிக்கு மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு இருப்பதாக பல கருத்து கணிப்புகளின் முடிவுகள் கூறின. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாகவும் கருத்து கணிப்புகள் கூறின. இதேபோல், பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறின. சில கருத்து கணிப்புகளில் கோவா, உத்தரக்காண்ட் மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டது. 

ஆனால், இன்று வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்கு முன்பு மற்றும் பின்பு எடுக்கப்பட்ட பல கருத்துக் கணிப்புகளை அடித்து துவம்சம் செய்துள்ளது. அதாவது, உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதி, ஆம்ஆத்மிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். கோவா மற்றும் உத்தராக்காண்ட் மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இதன்மூலம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு மாறாக அமைந்த கருத்துக் கணிப்புகளை மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி பங்கமாக கலாய்த்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ் படங்களில் வசூலைப்போல் கருத்துக்கணிப்புகளும் இஷ்டத்துக்கு அடிச்சிவிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவை இயக்குநர் வெங்கட்பிரபு லைக் செய்துள்ளார். 

மேலும் படிக்க | பான் இந்தியா படத்தில் இணைந்த ஸ்ரேயா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News