தாய் தந்தை செய்த நன்றியை மறந்து அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிள்ளைகள் இருக்கும் இந்த காலத்தில், தன்னை ஆளாக்கிய தாய்க்கு நன்றி கடனாக ஒரு மகள் கோவில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் லட்சுமி. இவருக்கு வயது 62. இவர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தனது தாய் கன்னியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம் ஆகிய மூவரும் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென ஆறுமுகம் தனது மனைவியையும் லட்சுமியையும் பல ஆண்டுகளுக்கு முன்பு விட்டு தனியாக சென்றுள்ளார். இதனால் செய்வது அறியாமல் தவித்த கன்னியம்மாள், வயிற்றுப் பிழைப்புக்காக, தனது மகளான லட்சுமியை அழைத்துக்கொண்டு சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளார்.
சிலநாட்கள் வறுமையில் வாடிய கன்னியம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ள பல வீடுகளில் பாத்திரம் துலக்கி பல கஷ்டங்களுக்கு மத்தியில் லக்ஷ்மியை படிக்க வைத்துள்ளார். லட்சுமி நன்றாக படித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணிபுரிந்து வந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த தாயை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தாய் கன்னியம்மாள் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை சுவடுகள் அடங்கிய புத்தகம் "உங்களின் ஒருவன்" விரைவில்..
தன்னை கஷ்டப்பட்டு பல இன்னல்களுக்கு இடையே வளர்த்து ஆளாக்கிய எனது தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த லட்சுமி தனது பணி ஓய்வு பெற்ற பிறகு வரும் ஓய்வூதியத்தை வைத்து தனது தாய்க்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோவில் கட்டியுள்ளார்.
தாய்க்காக கோவில் கட்டிய தாரகையின் ஒரு சிறு காணொளி இதோ:
இக்கோவிலில் தாய் கன்னியம்மாள் சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்து தினமும் தாயின் சிலைக்கு பூஜை செய்து வருகிறார் லட்சுமி. இக்கோவிலில் பிள்ளையார், நாகதேவதை, பாலமுருகன், வைஷ்ணவி பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலையையும் வைத்து வழிபட்டு வருகிறார். அருகில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தன்னை சிறுவயதிலிருந்தே தனியாளாய் எந்த கஷ்டமும் தெரியாத அளவிற்கு வளர்ந்த தாய்க்கு நன்றி கடனாக சிலை வைத்து வணங்கி வரும் லட்சுமிக்கு பொதுமக்களிடையே பாராட்டும் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க | போராடினால் ஜெயிலா? அதிர்ந்த ஏபிவிபி! மிரட்டிய போலீஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR